Tuesday, 12 January 2016

20 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை



20 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதர்களின் ஆயுளை நீட்டிக்க வகை செய்யும் ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர்.   பாலூட்டி இனங்களில் உள்ளசிர்ட்6′ (எஸ்..ஆர்.டி.6) என்ற மரபணு நோய்களை உருவாக்காமல் நீண்ட நாட்கள் வாழ வைக்க கூடியது என கண்டுபிடித்துள்ளனர்.
எனவே அந்த மரபணுவை தூண்டி செயல்பட வைக்க கூடிய புதிய மாத்திரையை கண்டு பிடித்து அதை எலிக்கு செலுத்தினர்.   அதை தொடர்ந்து அந்த எலி 18 சதவீதம் அதிக நாட்கள் உயிர்வாழ்ந்தது.
இதே முறையை மனிதர்களிடமும் பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். வயதாகும் காலத்துக்கு முன்பு அதாவது இளமையிலோ அல்லது நடுத்தர வயதாகும் போதோ இந்த மாத்திரையை பயன்படுத்துவதன் மூலம் 20 வருடங்கள் கூடுதலாக உயிர் வாழ முடியும் என கணித்துள்ளனர்.   அதற்கான ஆய்வு மனிதர்களிடம் விரைவில் நடைபெற உள்ளது.

No comments: